தமிழ் சினிமா

அக்​டோபரில் வரு​கிறது சோனியின் புதிய தமிழ் சேனல்

நிலா

சோனி பிக்​சர்ஸ் நெட்​வொர்க் இந்​தியா நிறு​வனம், ‘சோனி விழா’ என்ற பெயரில் தமிழில் புதிய பொழுது ​போக்கு சேனலை தொடங்க இருக்​கிறது. தமிழ் கலாச்​சா​ரம், மண்​வாசனை கொண்ட கதைகள், இசை, உணவு, திரு​விழாக்​கள் மற்​றும் அன்​றாட வாழ்க்​கை​யைக் கொண்​டாட விரும்​பும் பார்​வை​யாளர்​களுக்​காக இந்த சேனல் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழ்த் தாய் வாழ்த்​துப் பாடலுடன் சேனலின் பெயர் மற்​றும் லோகோவை இந்​நிறு​வனம் நேற்று வெளி​யிட்​டுள்​ளது. அக்​டோபர் மாதம் தொடங்க உள்ள இச்​சேனல் மற்​றும் டிஜிட்​டல் தளங்​களில் அசல் தொடர்​கள், உலகளா​விய ரியாலிட்டி நிகழ்ச்​சிகள், திரைப்​படங்​கள் மற்​றும் பிர​மாண்ட பொழுது​போக்கு நிகழ்ச்​சிகள் வழங்​கப்பட உள்​ளன.

இதுபற்றி சோனி நிறுவன அதி​காரி ராஜா​ராமன் சுந்​தரம் கூறும்​போது, “பு​திய தலை​முறை பார்​வை​யாளர்​களின் நம்​பிக்​கை​யை​யும் ஆர்​வத்​தை​யும் பிர​திபலிக்​கும் வகை​யில் மனதுக்கு நெருக்​க​மான தரமான கதைகளை உரு​வாக்க விரும்​பு​கிறோம். அக்​டோபரில் இந்த சேனலை பார்​வை​யாளர்​களிடம் கொண்டு சேர்க்​கக் காத்​திருக்​கிறோம்​” என்​றார்.

SCROLL FOR NEXT