தமிழ் சினிமா

ஏப்.24-ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‘சிவகாசி’

ஸ்டார்க்கர்

விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகவுள்ளது.

2005-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சிவகாசி’. தற்போது இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இதனை கணக்கில் கொண்டு ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT