தமிழ் சினிமா

‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ண​ராஜ், உடல்​நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. பாடகர் கிருஷ்ண​ராஜ் ஆரம்ப கால​கட்​டங்​களில் ‘டி​ராக்’ பாடி​னார்.

அதன்​பின்​னர் பிரபலப் பாடக​ராக உயர்ந்​தார். குறிப்​பாக, ‘நினை​விருக்​கும் வரை’ படத்​தில் ‘திருப்​பதி ஏழு​மலை வெங்​கடே​சா’, ‘பார்வை ஒன்றே போது​மே’ படத்​தில் ‘நீ பார்த்​துட்டு போனாலும் பாக்​காம போனாலும்​...’, ‘பொற்​காலம்’ படத்​தில் ‘தஞ்​சாவூரு மண்ணு எடுத்​து’, ‘கழுகு’ படத்​தில் ‘ஆம்​பளைக்​கும் பொம்​பளைக்​கும்’ உள்பட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பாடல்​களைப் பாடி​யுள்ளார்.

இசை அமைப்​பாளர் தேவா​வின் இசை​யில் அதி​க​மான பாடல்​களைப் பாடி​யுள்ள இவர், கடைசி​யாக ‘சூரரைப் போற்​று’ படத்​தில் ‘நாலு நிமிஷம்’ என்ற பாடலைப் பாடி​யிருந்​தார்.

இயேசு கிறிஸ்​து​வின் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்ட ‘கேளுங்​கள் தரப்​படும், தட்​டுங்​கள் திறக்​கப்​படும்’ என்​பது உள்பட பல ஆன்​மிகப் பாடல்​களை​யும் பாடி​யுள்​ளார்.

‘தஞ்​சாவூரு மண்ணு எடுத்​து’ பாடலுக்​காக சிறந்த பின்​னணிப் பாடகருக்​கான தமிழக அரசின் விருதைப் பெற்​றார். சிங்​கப்​பூர் முன்​னாள் அதிபர் எஸ்​.ஆர்​.​நாதன் மறை​வின்​போது, இறு​திச்​சடங்​கில் ‘தஞ்​சாவூரு மண்ணு எடுத்​து’ என்ற பாடல் அவரது விருப்​பத்​தின்​படி ஒலிபரப்பு செய்​யப்​பட்​டது.

சென்னை வளசர​வாக்​கத்​தில் வசித்​து​வந்த கிருஷ்ண​ராஜ், கடந்த சில மாதங்​களாக உடல் நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காக சிகிச்சை பெற்​று​வந்த நிலை​யில் நேற்று காலை கால​மா​னார்.

அவர் உடலுக்கு திரையுல​கினர், பொதுமக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். அவருடைய இறு​திச் சடங்​கு, அவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள வேம்​படி தாளத்​தில் நடை​பெறுகிறது.

மறைந்த கிருஷ்ண​ராஜின் மனைவி மோக​னம்​பாள் ஏற்​கெனவே கால​மாகி​விட்​டார். அவருக்கு ஜீவரே​கா, கீதப்​பிரி​யா என்​ற இரண்டு மகள்​கள்​ உள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT