தமிழ் சினிமா

நரிக்​குறவர் சமூகப் பின்னணியில் ‘சிங்​காரம்’

செய்திப்பிரிவு

யோகி பாபு கதையின் நாயக​னாக நடித்​துள்ள ‘சிங்​காரம்’ படத்தை கே.வி.கதிர்​வேலு இயக்​கி​யுள்​ளார்.

நரிக்​குறவர் சமூகத்​தைச் சேர்ந்த ஒரு​வர் அரசி​யலில் ஈடு​பட்டு சட்டப்​பேரவை உறுப்​பின​ராக உயர்​வதை மைய​மாகக் கொண்ட இப்​படத்​தில் வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்​கர், மரியா வின்சென்ட், சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

சாம் சி.எஸ் இசை அமைத்​துள்ள இப்​படத்தை ராக் புரொடக் ஷன் சார்​பில் ஏ.எஸ்.ரமண பாலாஜி மற்​றும் பத்​மாவதி காந்தி இணைந்து தயாரித்​துள்​ளனர். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். அக். 30-ல் வெளியாகும் இப்​படத்​தின் இசை வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் இயக்​குநர் ஆர்.வி.உதயகுமார் உள்​பட பலர் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் கே.வி. கதிர்​வேலு பேசும் போது, “நரிக்​குறவர் சமூகத்தினரின் வரலாறு மற்​றும் பின்​னணியை அறிந்​து​கொள்வதற்​காக விரிவான ஆய்​வு​களை மேற்​கொண்டு இப்படத்தை உரு​வாக்​கி​யுள்​ளேன். சமூகத்​தில் நில​வும் ஏற்​றத்​தாழ்வு​கள், அதி​காரம் கொண்​ட​வர்​களுக்கு அளிக்​கப்​படும் மரியாதை, மற்​றவர்​கள் புறக்​கணிக்​கப்​படுவது போன்ற பிரச்சினைகளை​யும் இப்​படம் பேசும். நரிக்​குறவர் சமூகத்​தின் வரலாற்​றுடன் அரசி​யல் சார்ந்த அம்​சங்​களும் இதில் இடம்பெற்றுள்​ளது. சமூகக் கருத்​துகளு​டன் குடும்​பத்​துடன் ரசிக்கக்​கூடிய பட​மாக உரு​வாகி​உள்​ளது” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT