சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை சிம்ரன், “வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் தனது கணவருடன் வந்து வாக்களித்த சிம்ரன், பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிஜத்தின் மீது கவனம் செலுத்துவோம், நாடகங்களைத் தவிர்ப்போம். இது வாக்குச்சாவடியே தவிர, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல. நாம் வாக்களிக்கும் போது அனைவரும் சமமானவர்களே. வாக்களிப்பது என்பது எனது உரிமை மட்டுமல்ல, அது எனது பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரவு 8.50 மணி நிலவரப்படி சுமார் 85.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் தமிழத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.