தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?

ஸ்டார்க்கர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்றின் பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தாணு தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘அரசன்’ படத்தினை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அஸ்வத் மாரிமுத்து படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதால் அப்படமே முதலில் தொடங்கும் என தெரிகிறது.

இப்படங்களை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்திருக்கிறார். இதற்கான முதற்கட்ட கதை விவாதம் நடைபெற்று இருக்கிறது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் கதை என்னவென்பது முடிவாகும் என தெரிகிறது. இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.

SCROLL FOR NEXT