தமிழ் சினிமா

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி: தோழியின் போராட்டம்!

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கொலையின் மர்மம் விடுபடாத நிலை யில், கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறார் கொல்லப்பட்டவரின் உயர்த் தோழி.

அவரால் உண்மையை வெளிக்கொண்டுவர முடிந்ததா என்கிற கதையுடன் வெளியாகவிருக்கும் படம், சையத் தமீன் தயாரித்துள்ள ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’.

முதல் பாதியைப் புலனாய்வு திரில்லராகவும் இரண்டாம் பாதியை ‘கோர்ட் ரூம் டிராமா’வாகவும் எழுதி, இயக்கியிருக்கிறார் சந்தோஷ் ரயான்.

ஆஷிகா அசோகன், சாண்ட்ரா அனில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா, ரேகா, ஹரீஷ் பேரடி, நிழல்கள் ரவி உள்படப் பல மூத்த நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

கோவையில் நடந்த உண்மைச் சம்பவம் எனும் படக்குழு, கோவை, சென்னை, கொச்சின் ஆகிய ஊர்களில் படமாக்கியிருக்கிறது.

SCROLL FOR NEXT