சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ம் தேதி மதுரையில் தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கி வரும் ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தை கடந்த மே மாதம் கமல்ஹாசன் தொடங்கி வைக்க, மதுரையில் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆக.10-ம் தேதி மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.