ரியோ ராஜ், சானியா அய்யப்பன் இணைந்து நடிக்கும் படம் ‘மேடி’. இதில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி, கார்த்திகா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
ரோல் டைம் ஸ்டூடியோஸ் சார்பில் கலையரசு தயாரிக்கும் இப்பத்தின் முக்கியமான காட்சிகள், சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.