தி ஹர்ட் லாக்​கர், ரன் லோலா ரன், குணா

 
தமிழ் சினிமா

ஒளிப்பதிவில் 3 வடிவங்களில் திரைநேரம்! | ஒளி என்பது வெளிச்சமல்ல 9

சி.ஜெ.ராஜ்குமார்

ஒளிப்​ப​தி​வின் பெரும்​பாலான நுட்​பங்​கள் ஒளி, நிழல், லென்​ஸ், கோணங்களில் நிகழ்​கின்​றன. அவற்​றில் மிக​வும் முக்​கிய​மான ஒன்​று, நேரத்தை மாற்​றும் திறன். நிஜ வாழ்க்​கை​யில் நேரம் கடி​காரத்​தில் நகர்​கிறது. ஆனால் சினி​மா​வின் திரைநேரம் ஒளிப்​ப​தி​வாளர் மற்​றும் படத்​தொகுப்​பாளர் ஆகியோரின் கைகளில் நிகழ்​கிறது.

படைப்​பில் ஒரு நிமிடம் என்​பது பல நிமிடங்​களாக நீளலாம். பத்​தாண்​டு​கள் சில நொடிகளில் முடிந்து விடலாம். இந்த நுட்​பம் சினி​மாடிக் டைம் எனப்​படும். சினி​மா​வில் நேரம் மூன்று வடிவங்​களில் செயல்​படு​கிறது-சுருங்​கிய நேரம் (கம்ப்​ரெஸ்டு டைம்), உண்​மை​யான நேரம் (ரியல் டைம்) மற்​றும் நீட்​டிக்​கப் பட்ட நேரம் (எக்​ஸ் ​டென்​டட் டைம்). இவை ஒவ்​வொன்​றும் ஒளிப்​ப​தி​வின் ரிதம், காட்​சி​யின் அமைப்​பு, கேமரா அசைவு மற்​றும் ஒரு ஷாட்​டின் நேர அளவு​கோல் மூலம் உரு​வாக்​கப்​படு​கிறது.

சுருங்​கிய நேரம் – கதை ஓடும் வேகம்: இது சினி​மா​வின் இயல்​பான மொழி. இது எப்​படிச் சாத்​தி​யப்​படு​கிறது என்​றால், காட்​சி​யில் தேவை​யில்​லாத இடைவெளி​கள் அனைத்​தும் அகற்​றப்​படும். கதை முன்​னேறும் தருணங்​கள் மட்​டுமே திரை​யில் தோன்​றும்.

எலிப்​டிகல் ஃப்​ரேமிங்: ஒளிப்​ப​தி​வாளர் ஒரு செயலின் முடிவை ஒரு ஃப்​ரேமிலும், அடுத்த நிகழ்​வின் தொடக்​கத்தை மற்​றொன்​றி​லும் அமைக்​கிறார். உதா​ரணத்​துக்கு ஒரு கதா​பாத்​திரம் “நாளை நான் மும்பை போகிறேன்” என்று சொல்​கிறார்.

அடுத்த ஷாட்​டில் நேரடி​யாக மும்பை விமான நிலை​யம் காட்​டப்​படும். நடு​விலிருந்த பயணம் திரை​யில் நிகழவே இல்​லை, ஆனால் பார்வையாளரின் மனதில் நடந்​து​விட்டது.

மாண்​டேஜ் (காட்​சித் தொடர்ச்​சி) - ஒளிப்​ப​தி​வில் வேக​மான அமைப்​பு​கள், வேக​மான ஷாட்​டு​கள், ஒத்த செயல்​கள், மாறும் இடவெளி​கள், ஃப்​ரேமின் ரிதம், இவற்​றின் மூலம் மாதங்​கள், ஆண்​டு​கள் சில நொடிகளில் சுருங்கி விடு​கின்​றன.

இன்​றைய பெரும்​பாலான திரைப்​படங்​களின் சுமார் 90 சதவி​கிதக் காட்​சிகள், இந்த சுருங்​கிய நேர நெறியைப் பின்​பற்​றுகின்​றன. ஏனெனில், சினி​மா​வின் நோக்​கம் ‘உண்மை நேரத்தை காட்​டு​வது’ அல்ல; ‘கதை உணர்ச்​சியை முன்​னேற்​று​வது’​தான்.

உண்​மை​யான நேரம்: உண்​மை​யான நேரம் என்​பது, திரையில் ஒரு காட்சி ஓடும் நேர​மும், அது கதை​யில் நடக்​கும் நேர​மும் ஒன்​றாகவே இருக்​கும் நுட்​பம். இது சினி​மா​வில் மிக​வும்​அரி​தாகப் பயன்​படுத்​தப்​படும். ஆனால் சக்​தி​வாய்ந்த முறை​யாகும்.

நுழைவு உணர்வு (இம்​மெர்​ஷன்) - கட் இல்​லாமல் தொடர்ந்து ஓடும் காட்​சி, பார்​வை​யாளரை நேராக அந்த சூழ்​நிலைக்​குள் இழுத்​துச் செல்​கிறது. கதா​பாத்​திரத்​தைத் தொடர்​வது போல ஒரு நிஜ உணர்வு உரு​வாகிறது. காட்​சி​யில் அழுத்​தம் மற்​றும் உணர்ச்சி உயர்​வும் நிகழ்​கிறது.

இடையே நிறுத்​தம் இல்​லாத​தால் ஓட்​டம், பயம், பதற்​றம் போன்ற உணர்​வு​கள் இன்​னும் தீவிர​மாக வெளிப்​படும். பார்​வை​யாள​ருக்கு ஒரு ‘தப்ப முடி​யாத’ உணர்வு உண்​டாகும். உண்​மை​யான நேரம் எப்​படி உரு​வாக்​கப்​படும்? ஒரு காட்சி அல்​லது ஒரு முழு சீக்​வென்ஸ் எந்த கட்​டும் இல்​லாமல் தொடர்ந்து படமாக்​கப்​படும்.

நடக்​கும் நிகழ்வு எப்​படியோ, அதே நேரத்​தில் திரை​யிலும் காட்சி ஓடு​வ​தால் அதன் தாக்​கம் அதி​கரிப்​ப​தோடு நம்​பகத்​தன்​மை​யை​யும் கூட்​டு​கிறது. உதா​ரண​மாக, ஒரு நடிகர் பாலத்​திலிருந்து ஆற்​றில் குதிக்​கிறார். இதை ஒரு தொடர் ஷாட்​டாக ரியல் டைமில் படமாக்​கப்​படு​வ​தால், அந்த செயல் உண்​மை​யாக நடந்​தது போல உணரப்​படு​கிறது.

‘குணா’ திரைப்​படத்​தில் இடம்​பெற்ற ஒரு புகழ்​பெற்ற ரியல் டைம் காட்​சி​யில் கமல்​ஹாசன் ஓர் அறைக்​குள் தொடர்ந்து நடந்து கொண்டே பேசு​வார். முதலில் மெது​வாக நடக்​கத் தொடங்கி போகப் போக நடை​யும், வசன உச்​சரிப்​பும், கேமரா நகர்​வும் வேகமெடுக்​கும்.

இதன் விளை​வாக அந்​தக் காட்​சி​யின் உணர்ச்சி இன்​னும் தீவிரமடைந்​தது. ‘கட்’ இல்​லாமல் படமாக்​கப்​பட்​ட​தாலேயே கமல்​ஹாசனும் ஒளிப்​ப​தி​வாளர் வேணு​வும் மிக​வும் பாராட்​டப்​பட்​டனர்.

நீட்​டிக்​கப்​பட்ட நேரம்: திரை​யில் நேரத்தை நீட்​டிக்க ஸ்லோ மோஷன் (அதிக ஃப்​ரேம் ரேட்​டில் கேமரா இயக்​கம்) ஓவர்​லேப்​பிங் ஆக் ஷன் மற்​றும் மல்ட்டி கேமரா உத்​தி​களில் படமாக்​கு​வது. ஒரே செயலை பல கோணங்​களில் காட்​சிப்​படுத்தி மீண்​டும் மீண்​டும் காட்​டு​வ​தால், நேரத்தை நீட்​டிக்க முடி​யும்.

தி ஹர்ட் லாக்​கர் (2008) - போர்ப் பின்​னணி​யில் உரு​வான இத்​திரைப்​படத்​தில் குண்​டு​வெடிப்​புக் காட்​சிகள் அதீத ஸ்லோ மோஷனில் படமாக்​கப்​பட்​டன. இதன் மூலம் காற்​றில் பறக்​கும் தூசி, உடைந்த பொருட்​களின் சிறு​துண்​டு​கள், கதா​பாத்திரங்​களின் முகத்​தில் தோன்​றும் மிரட்சி இவை அனைத்தும் ஃப்​ரேமில் நேரம் நீண்​டது போன்ற உணர்வை ஏற்​படுத்​தி​யது.

இதன் நோக்​கம், கணப் பொழு​தில் நடக்​கும் அதிர்ச்​சியை பார்​வை​யாள​ருக்கு நீட்​டித்​துக் காட்​டு​வ​தே​யாகும். ஒளியைப் பயன்​படுத்​தும் திறனைப் போல​வே, நேரத்​தைக் கையாளும் திறனும் ஒளிப்​ப​தி​வாள​ருக்கு மிக​வும் முக்​கிய​மானது. சுருங்​கிய நேரம் கதை முன்​னேற்​றத்​தைத் துல்​லிய​மாக வழி நடத்​தும். உண்​மை​யான நேரம் பார்​வை​யாளரை காட்​சிக்​குள் அழைத்​துச் செல்​லும். நீட்​டிக்​கப்​பட்ட நேரம் உணர்ச்​சியை நொடிகளில் உறையச் செய்​யும்.

காலத்​தின் அமைப்பு – கதை​யின் நான்கு வழிகள்: நேர்​கோட்​டுக் கதை சொல்​லல் முறை (லீனியர் காலம்) பாரம்​பரிய கதை சொல்​லல் உத்​தி​யான இதில் கதை ஆரம்​பத்​தில் தொடங்கி நடுப்​பகு​தி​யாக வளர்ந்​து, முடி​வில் நிறைவடை​யும்.

சரி​யான கால ஓட்​டத்​தில் நகரும் கட்​டமைப்​பு. காரணம்​–​விளைவு வரிசை தெளி​வாக இருக்​கும். இதில் பார்​வை​யாள​ருக்கு எளிய புரிதலும் சீரான உணர்ச்​சிப் பயண​மும் அளிக்கிறது.

நான்​–லீனியர் காலம்: கதை​யின் நேர வரிசை முறை​யாகச் செல்​லாமல் காட்​சிகளில் காலத்தை முன் பின்​னாக மாற்றி நிகழ்​காலம், கடந்​த ​காலம், எதிர்​காலம் என தாவிச் செல்​லும் முறை​யில் உரு​வாக்​கப்​படு​வதே ‘நான் –லீனியர்’ படமாக்​கல் உத்​தி. இது கதை​யின் மர்​மத்​தை​யும் உணர்ச்​சிக் கலக்​கத்​தை​யும் அதி​கரிக்​கிறது.

சுழற்சி காலம் (லூப் / சைக்​ளிக்​கல் டைம்) - ஒரு நிகழ்வு பலவித​மாக மீண்​டும் மீண்​டும் நிகழ்​வது போல காட்​சி​யமைக்​கப்படும். இவ்​வகை​யான திரைப்​படங்​களில் சில செய்​கைகள், சில முடிவு​கள், சுழற்சி வடி​வில் திரும்​பத் திரும்​பத் தோன்​றும்​போது ஒவ்​வொரு முறை​யும் ஒரு புதிய கோணத்​தில் அணுகி பார்​வை​யாள​ருக்கு ஒரு பரவச உணர்​வை​யும் ஒரு முடி​வில்லா பயண அனுபவத்​தை​யும் அளிக்​கிறது.

ரன் லோலா ரன், மாநாடு ஆகிய திரைப்​படங்​கள் முழு​வது​மாகவே லூப் டைமில் படமாக்​கப்​பட்​ட​வை. நிறுத்​தப்​பட்ட காலம் (சஸ்​பெண்​டட் டைம் இது, கதை முன்​னேறாமல் நேரம் நின்​று​விட்​டது போன்ற தோற்​றத்தை உரு​வாக்​கு​வது.

சினி​மா​வில் மிக ஆழமான உணர்ச்சி நிறைந்த தருணங்​களை உரு​வாக்​கும் உத்​தி. இயக்​குநர் அடூர் கோபால​கிருஷ்ணன், தனது எலிப்​பத்தா​யம் போன்ற படங்களில் நேரத்தை ஸ்டாட்​டிக்​காக அமைத்து ஒவ்​வொரு தருணத்​தை​யும் உன்​னிப்​பாகக் கவனிக்க வைப்​பார்.

காட்சி நீளம் (ஷாட் ட்யூரேஷன்) - ஒரு காட்சி எவ்​வளவு நேரம் நீடிக்க வேண்​டும் என்​பதை இது நிர்​ண​யிக்​கிறது. நீண்ட காட்​சிகளில் மூழ்​கும் உணர்​வும் குறுகிய காட்​சிகளில் வேக​மான ஆற்​றலும் வெளிப்​படும்.

கேமரா இயக்​கம் (கேமரா மூவ்​மென்ட்) - நேரத்​தின் உணர்வை மாற்​றக்​கூடிய​வற்​றில் முக்​கிய​மானது கேமரா இயக்​கம்​. மெது​வான அசைவு மூலம் நேரத்தை நீட்​டிக்​கச் செய்து எதிர்​பார்​ப்பை​யும், வேக​மான அசைவு மூலம் அவசர உணர்​வை​யும் அளிக்​கும்.

திரை​யில் காலத்தை யார் உரு​வாக்​கு​கிறார்​கள்? - பார்​வை​யாளர் ஒரு தருணத்தை எவ்​வளவு நேரம் உணர வேண்​டும் என்று தீர்​மானிப்​பவர் இயக்​குநர். அந்​தத் தருணம் எப்​படி வெளிப்பட வேண்​டும் என்று முடிவு செய்​பவர் ஒளிப்​ப​தி​வாளர்.

அவை எப்​போது முடிவடைய வேண்​டும் என்​ப​தைத் தீர்​மானிப்​பவர் எடிட்​டர். இம்​மூவரும் இணைந்து உரு​வாக்​கு​வது பார்​வை​யாளரின் “உணர்​வுக் கடி​காரம்”. திரை​யில் நேரம் இயற்கை நேரம் அல்ல. அது படக்​குழு உரு​வாக்​கும் ‘திரைக்காலம்’

(புதன்​ தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT