தமிழ் சினிமா

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஸ்க்ரோல்’ திரையிடத் தேர்வு

நிலா

‘பாஸ்​வேர்ட்’ படத்தை இயக்​கிய கண்​ணன் அடுத்து இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘ஸ்க்​ரோல்’. அர​விந்த் சுந்​தர், காவ்யா அனில் முதன்மை கதாப்​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளனர். மேகா ராஜன், முருகன் கோவிந்​தசாமி, சிபி, பொற்​கொடி, சுரேந்​தர் ஆகியோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். ஜோகன் மற்​றும் தினகர் ஆகியோர் இசை அமைத்து உள்​ளனர்.

இதன் கதை முழு​வதும் நாயக​னின் செல்​போன் திரை வழியே சொல்​லப்​படும் வித்​தி​யாச​மான முயற்​சி​யாக உரு​வாகி இருக்​கிறது. ஸ்​மார்ட்​போனுக்கு அடிமையாவதை மையப்​படுத்தி இதன் திரைக்​கதை அமைந்​துள்​ளது.

கே 16 ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ள இத்​திரைப்​படம், கோவாவில் நடை​பெறும் 57-வது இந்​திய சர்​வ​தேச திரைப்​பட விழா​வில் ‘இந்​தி​யன் பனோரமா’ பிரி​வில் திரையிடத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. நவ. 28 வரை நடை​பெறும் இப்​பட விழா​வில் வேர்ல்டு பிரீமியர் ஆக இப்​படம் திரையிடப்​படு​கிறது. அடுத்த வருடம் திரையரங்​கு​களில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT