கடந்த வாரம் போல் இந்த வாரமும் தொடர்ந்து வரும் விடுமுறையைக் கொண்டாட ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த பல படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அந்தப் படங்களின் பட்டியல் இது.
சர்தார் 2:
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘சர்தார் 2’. ஏற்கெனவே வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மாரெம்மா:
மஞ்சளா நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதிராஜு நடித்திருக்கும் தெலுங்கு ஆக்ஷன் படம் ‘மாரெம்மா’. இந்தப் படத்தில் தீபா பாலு, விகாஸ் வசிஸ்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலங்கானா கிராமிய பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ரீயூனியன்:
சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அருள்தாஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ரீயூனியன்’.
இந்தப் படத்தில் அருள்தாஸுடன் அனுபமா குமார், அகில் சந்தோஷ், ஜெயக்குமார் ஜானகிராமன், பர்வீன் பேகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
சாலகார சஹாகர சங்கம் (Saalagaarara Sahakara Sangha):
ஆர்.விக்ரம் தனஞ்ஜெயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சாலகாரர சஹாகர சங்கம்’. இந்தப் படத்தில் காமெடி கில்லாடி லோகேஷ், கெம்பகவுடா, ப்ரவீன் குமார் கஸ்தி, ஜாலி ஜாக், ரக்ஷிதா ஷிவமோகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தக் கன்னட நகைச்சுவைத் திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்:
ஆதித்ய ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் வைஷ்ணவி சைதன்யால சிவாஜி, வாசுகி, ரோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ரொமான்டிக் காமெடி தெலுங்கு படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
பிரதம த்ரிஷ்திய குட்டக்கர் (Pradhama Drishtiya Kuttakkar):
ஷஹாத் நிலம்பூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பார்வதி திருவோத்து, மேத்திவ் தாமஸ், சித்தார்த் பரதன், உன்னிமாயா பிரசாத், விஜயராகவன், ஆஸீஸ் நெடுமங்காடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாள மர்மப் படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மண்டாடி:
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கும் கடல் விளையாட்டு பற்றிய படம் ‘மண்டாடி’.
இந்தப் படத்தில் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், கிரிஷ் ஹாசன், மிதுன் ஜெய் சங்கர், ரவிந்த்ர விஜய், பால சரவணன், ஸ்டன் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகிறது.