ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் நவம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் படம் ‘ஓம்: சேப்டர் 1 உதிரம்’.
இதில் சாய் பல்லவி ஏற்றுள்ள நித்யா ஐபிஎஸ் கதாபாத்திரம் குறித்த டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தக் கதாபாத்திரத்துக்கு சாய் பல்லவி ‘போலீஸ் கிராப்’ வெட்டினால் எப்படியிருக்கும் என்று பார்க்க ஒரு ரசிகர் ‘ஏஐ’யில் அதேபோன்ற படங்களை உருவாக்கிப் பதிவிட, அந்தப் படங்களை உண்மை என நினைத்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள். ‘சீக்கிரம் முடிவளர வாழ்த்துகள்’ என்று சாய் பல்லவியை வாழ்த்தவும் செய்கிறார்கள் பலர்.