தமிழ் சினிமா

எஸ்.ஜானகி: 33 மாநில விருதுகளைப் பெற்ற இசை அரசி!

செய்திப்பிரிவு

1980-ல் வெளிவந்த மகேந்​திரனின் நெஞ்​சத்​தைக் கிள்​ளாதே படத்தில் மம்மி பேரு மாரி என்ற பாடலை ஆண் குரலில் பாடி அசத்​தி​னார் ஜானகி.

33 மாநில விருதுகள்சிறந்த பின்​னணிப் பாடகிக்​காக 33 முறை மாநில விருதுகளை இசை அரசி ஜானகி பெற்​றுள்​ளார். தமிழ்​நாடு அரசின் விருதை 6 முறை​யும், ஆந்​திர அரசின் நந்தி விருதை 10 முறை​யும், கேரள அரசின் விருதை 11 முறை​யும் வென்​றுள்​ளார்.

தமிழக அரசின் கலை​மாமணி விருதும் அவருக்​குக் கிடைத்​துள்​ளது. 1986-ல் சாஹேப் இந்​திப் படத்​துக்​காக இந்​திப் பாடல் பாடி பிலிம்​பேர் விருதை​யும் பெற்​றார். அவரது திரை​யுலக சாதனையைப் பாராட்டி மைசூரு பல்​கலைக்​கழகம் அவருக்கு கவுரவ டாக்​டர் பட்​டத்தை வழங்கி சிறப்​பித்​தது. கர்​நாடக அரசின் உயரிய விரு​தான ராஜ்யோத்​சவா விருதை​யும் அவர் பெற்றுள்ளார்.

ஜானகி-எஸ்​பிபி-ராஜா:

திரை​யுல​கில் இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, பாடகர் எஸ்​.பி.​பாலசுப்​பிரமணி​யம், எஸ். ஜானகி கூட்​டணி பல சிறந்த திரைப்​பாடல்​களைக் கொடுத்து சாதனை படைத்​துள்​ளது.

மறைந்​தப் பின்​னணிப் பாடகர் எஸ்​.பி.​பாலசுப்​பிரமணி​யத்​துடன் இணைந்து அதிக பாடல்​களை ஜானகி பாடி​யுள்​ளார். மேலும் கே.ஜே.யேசு​தாஸ், பி.பி. ஸ்ரீநி​வாஸ், டி.எம்​.சவுந்​தர​ராஜன் ஆகியோருடன் இணைந்து ஏராள​மான பாடல்​களை ஜானகி பாடியுள்​ளார்.

தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஜானகி, கான கோகிலா, கான கோகிலே என்​றும் ரசிகர்​களால் அன்​போடு அழைக்​கப்​பட்​டார்.

தாய் மொழி தெலுங்கு என்ற போதி​லும் கன்னட மொழி​யில் அதிக பாடல்​களைப் பாடி​யுள்​ளார். தமிழ், மலை​யாளம், தெலுங்​கிலும் ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடி​யுள்​ளார்.

1938-ல் பிறந்த ஜானகி தனது 10-வது வயதில் நாகஸ்வர வித்​வான் பைடிசு​வாமி​யிடம் கர்​நாடக இசை​யின் நுணுக்​கங்​களை​யும், ஆரம்பப் பாடங்​களை​யும் பயின்​றார்.

1957-ல் தனது முதல் பாடலைப் பாடிய அவர், 2016-ல் 10 கல்​பனகள் என்ற மலை​யாளப் படத்​துக்​காக தனது கடைசிப் பாடலைப் பாடினார்.

வெளிவராத முதல் பாடல்:

தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல் என்​றழைக்​கப்​படும் எஸ்​.ஜானகி காதல், சோகம், நகைச்​சுவை, கிண்​டல் என அத்​தனை உணர்ச்​சிகளுக்​கும் இனிமை​யான பாடல்​களை பாடி​யிருக்​கிறார்.

அந்​தப் பாடல்​கள் அனைத்​தும் எப்​போதுகேட்​டாலும் மனதுக்கு இதம் தரும். ஆனால் அவர் தமிழில் பாடிய முதல் பாடல் வெளிவரவே இல்லை என்​பது சோகம். அவர் ‘வி​தி​யின் விளை​யாட்​டு’என்ற படத்​தில் முதன்​முறை​யாக பாடி​னார்.

இதுபற்றி அவர் முன்​னர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது; எங்​கள் மாமா, ஏவிஎம் நிறு​வனத்​துக்கு அப்​போது ஒரு கடிதம் எழு​தி​னார். என் மரு​மகள் சிறப்​பாக பாடு​வார், அவரை சினி​மாவுக்கு பயன்​படுத்​திக்​கொள்​ளலாம்” என்று கடிதம் எழு​தி​னார்.

அங்​கிருந்து ஆடிஷனுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்​தது. நெல்​லூரில் இருந்து சென்னை ஏவிஎம் நிறு​வனத்​துக்கு புறப்​பட்டு வந்​தோம். சுதர்​சனம், கோவர்த்​தனம் இரண்டு பேரும் இசை அமைப்​பாளர்​கள்.

அவர்​களும் ஏவிஎம் செட்​டி​யாரும் என் குரலை கேட்டு தேர்வு செய்​தார்​கள். அந்த படம் ‘வி​தி​யின் விளை​யாட்​டு’. ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடலை பாடினேன். அந்​தப் பாடல் மிக​வும் நன்​றாக இருந்​தது. ஆனால், அந்​தப் படம் வெளியே வரவே இல்​லை. விதி விளை​யாடி​விட்​டது. அந்​தப் பாடல் வெளிவ​ராததற்​காக மிக​வும் வருத்​தப்​பட்​டேன். பிறகு மதகள​நாட்டு மேரி என்ற தமிழ்ப்​படத்​தில் பாடினேன்.

அது​தான் என் முதல் தமிழ்ப்​பாடல். சிறு​வய​தில் இருந்தே பாடிக்​கொண்​டிருக்​கிறேன். பத்து வயது ஆனபோது என் அம்மா கிளாசிக்​கல் பாடல் கற்​றுக்​கொள்ள என்னை அனுப்​பி​னார். அப்​போது பலர் அங்கு கற்​றுக்​கொண்​டிருந்​தார்​கள்.

என்னை சும்மா உட்​கார் என்று சொல்​லி​விட்​டார். மற்​றவர்​களிடம் சங்​கதி ஒன்றை பாடச் சொல்​வார். பிறகு என்னை பாடச் சொல்​வார். என் குரலைக் கேட்​டு, ‘இவரிடம் கற்​றுக்​கொள்​ளுங்​கள்” என்று அவர்​களிடம் சொல்​வார். ஆனால் தொடர்ந்து அவரிடம் நான் கற்​றுக்​கொள்​ள​வில்​லை.

குழந்தை குரல்: அப்​போது டூயட் பாடும்​போது, உடன் பாடு​கிறவர் சரி​யாக பாட வேண்​டும். சில நேரம் நான் சிறப்​பாக பாடி​யிருப்​பேன். உடன் பாடு​கிறவர் சரி​யாக பாட​வில்லை என்​றால், ரீடேக் போக வேண்​டும். சில நேரம் நாம் சிறப்​பாக பாடி​யிருப்​ப​தாக நினைக்​கும்​போது, அவர் தவறாக பாடி​னால், முழு​வதும் திரும்ப பாட வேண்டும். அப்​போது வருத்​த​மாக இருக்​கும்.

சில நேரம் கோப​மாக வரும். சின்ன வயது குழந்​தைகளிடம் கொஞ்சி கொஞ்​சிப் பேசுவது வழக்​கம். அப்​படி பேசி​னால், குழந்​தைகள் என்​னுடன் ஆசை​யாக பேச வரு​வார்​கள். அப்​படி குழந்தை போல பேசி பழகிய​தால், குழந்தை குரலில் அவர்​களை போலவே என்​னால் பாட முடிந்​தது. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT