லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘ரன்’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி ரீ-ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ரன்’. 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏப்ரல் 24-ம் தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 10-ம் தேதி இப்படம் வெளியாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.