புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் ரியோ ராஜ்.
நடிகர் ரியோ ராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ள ரியோ, அதனை தனது நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் தொடங்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது ‘ராம் இன் லீலா’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ரியோ. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு, தனது தயாரிப்பில் தொடங்கும் இரண்டு படங்களையும் முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்தாண்டுக்குள் இந்த இரண்டு படங்களையும் முடித்து வெளியிடவும் முடிவு செய்துள்ளார் ரியோ.
’ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரியோ. விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர், தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். அவர் நடித்த படங்கள் யாவுமே லாபகரமாக இருப்பதால், அவரே தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.