இயக்குநர், நாயகன், நாயகி என்று பலரும் அறிமுகமாக இருக்கும் படங்களின் பாடல்களோ, டிரெய்லரோ வெளியானால், அவை சட்டென்று கவரும் வகையில் இருந்தால் தவிர ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது. அந்த ஆதரவை ‘ரெட் லேபிள்’ படத்தின் ‘மிளிரா’ என்கிற பாடல் இணையத்தில் பெற்றுள்ளது. மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்த கைலாஷ் மேனன் தமிழில் இசையமைத்துள்ள முதல் படம்.
ஒரு பொறியியல் கல்லூரியில் கதை நடக்கிறது. கல்லூரியின் மாணவர் தலைவராக இருக்கும் நாயகன் மீது விழும் கொலைப்பழியின் பின்னாலி ருக்கும் பிளாஷ்பேக் கதையை எழுதி யிருக்கிறார் பொன்.பார்த்திபன். கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகிறார் லெனின். அவருக்கு ஜோடியாக மலையாளத்திலிருந்து அஸ்மின் அறிமுகமா கிறார். ‘மிளிரா’ பாடலில் அஸ்மின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.