சசசிகுமார், சிம்ரன் நடித்து வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இவர், ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ளார்.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
காதல் கதையாக உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு சென்னை, திருச்சி பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்துக்கு ‘வித் லவ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இத்தலைப்பு டீஸரை, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இந்த டீஸர் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.