நடிகர் ரஜினிகாந்த், 80-களில் இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 1989-ம் ஆண்டு அவர் நடிப்பில் உருவான படம், ‘ஹம் மே ஷாஹென்ஷா கோன்’.
இதில் சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, அம்ரிஷ் புரி, ஜெகதீப் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹர்மேஷ் மல்கோத்ரா இயக்கினார். ராஜா ராய் தயாரித்த இந்தப் படத்துக்கு லட்சுமிகாந்த்- பியாரிலால் இசையமைத்தனர்.
சென்சார் செய்யப்படாமல் இருந்த இப்படம், இயக்குநர் ஹர்மேஷ் மல்கோத்ராவின் மறைவை அடுத்துக் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் 37 வருடத்துக்குப் பிறகு இப்படத்தை ஏப்ரலில் வெளியிட உள்ளனர். தயாரிப்பாளர் ராஜா ராய் இதுபற்றி கூறும்போது, “இந்தப் படத்துக்காக நாங்கள் நம்பிக்கையை இழக்க
வில்லை. அனைத்து சவால்களுக்கும் எதிராக இப்படம் உயிர் பிழைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, ஆடியோ மற்றும் காட்சி அனுபவத்தை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ) பயன்படுத்தியதாக இணைத் தயாரிப்பாளர் அஸ்லாம் மிர்சா தெரிவித்துள்ளார்.