தமிழ் சினிமா

ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ டிரெய்லரை வெளியிட்டார் ரஜினி​

நிலா

ஒய்​.ஜி.மகேந்திரா முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள திரைப்​படம், ‘சா​ரு​கேசி’. இதில் சத்​ய​ராஜ், சமுத்​திரக்​க​னி, சுஹாசினி மணிரத்​னம், தலை​வாசல் விஜய், ரம்யா பாண்​டியன், ராஜ் ஐயப்​பன், மது​வந்தி மற்​றும் பலர் நடித்​துள்​ளனர்.

அருண். ஆர் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்​கதை எழுதி இயக்கி உள்​ளார். பாடல்​கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்​துள்​ளார்.

இ5 என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் ஜே. ஜெயகிருஷ்ணன் வெளி​யிடு​கிறார். ஒய்​.ஜி.மகேந்​திரா இதே பெயரில் நடத்​திய நாடகத்​தைத் திரைப்​பட​மாக்கி உள்​ளனர்.

“இப்​படம், செவ்​வியல் இசை, உறவு​கள், மனித உணர்​வு​கள் மற்​றும் கலைப் பாரம்​பரி​யத்​தின் சாராம்​சத்​தை அழகாகப் படம்​பிடித்​துக் காட்​டு​கிறது.

வலு​வான இசை அடித்​தளம் மற்​றும் உணர்​வுப்​பூர்​வ​மான கதைசொல்​லல் காரண​மாக, இதை சங்​க​ராபரணம், சிந்து பைரவி போன்ற படங்​களின் வரிசை​யில் சேர்க்​கலாம்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இப்​படத்​தின் டிரெய்​லரை நடிகர் ரஜினிகாந்த் வெளி​யிட்​டார். இந்​நிகழ்​வில் படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

SCROLL FOR NEXT