தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் உடன் இணையும் ராஜ் பி.ஷெட்டி

ஸ்டார்க்கர்

‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ராஜ் பி ஷெட்டி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

‘தாய் கிழவி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ‘சேயோன்’ படத்தினை இயக்கி வருகிறார் சிவகுமார் முருகேசன். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ் பி ஷெட்டி நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, போஸ்டருடன் அறிவித்திருக்கிறது. ராஜ் பி ஷெட்டி நடிக்கும் முதல் தமிழ் படமாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விவேக் விஜயகுமார், எடிட்டராக ஷான் லோகேஷ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT