தமிழ் சினிமா

நாட்டார் மர்மக்கதையில் ஜமீனாக நடிக்கிறார் ரகுமான்

நிலா

நாட்​டார் மர்​மக் கதையை மையப்​படுத்தி உரு​வாகும் படத்​தில் ரகுமான் ஜமீ​னாக நடிக்​கிறார். இதை ‘விழா’ படத்தை இயக்​கிய பாரதி பால​கு​மாரன் இயக்​கு​கிறார்.

‘சாம்​பியன்’ விஷ்​வா, மைம் கோபி, ஆடு​களம் நரேன், ரிஷா ஜாக்​கோப்​ஸ், முனீஷ்​காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்​கர், ரம்யா சுரேஷ் என பலர் நடிக்​கின்​றனர்.

கோமளா ஹரி பிக்​சர்ஸ் பட நிறு​வனம் சார்​பில் கோமளா ஹரி​பாஸ்​கரன் தயாரிக்​கிறார்.

1980-களின் பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தில், ‘அமானுஷ்ய’ சம்​பவங்​களால் பாதிக்​கப்​பட்ட தனது குடும்​பத்தை காக்க முயற் சிக்​கும் ஜமீன் கதா​பாத்​திரத்​தில் ரகு​மான் நடிக்​கிறார். இதன் படப்​பிடிப்பு தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

SCROLL FOR NEXT