‘சூர்யா 47’ படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பல்வேறு உரிமைகள் விற்பனையாகி விட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்ளவுள்ளார்.
இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் மற்றும் இசை உரிமையினை திங்க் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன. இதன் மூலமாகவே சுமார் ரூ.70 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது ‘சூர்யா 47’. இதன் மூலம் எந்தவொரு பணமும் முதலீடு செய்யாமலேயே அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டது.
இந்த பணத்தினை வைத்தே தயாரிப்பு செலவினை முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் ‘சூர்யா 47’ படத்தின் மூலம் நல்ல லாபம் ஈட்டிவிடுவார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், குறுகிய நாட்களில் ஒட்டுமொத்த படத்தினை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதில் நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கவுள்ளனர்.