தமிழ் சினிமா

சினி​மா​வில் நடிப்​பவர்​கள் வெப் தொடர்​களில் நடிக்​கக் கூடாது: தயாரிப்​பாளர்​கள் கூட்டுக் கூட்டத்தில் தீர்​மானம்

செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்​குமரன் தலை​மை​யில், தயாரிப்​பாளர்​கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் இணைந்த கலந்​தாய்வு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடைபெற்றது.

இதில் தயாரிப்​பாளர்​கள் சங்க செய​லா​ளர்​கள் எஸ்​.க​திரேசன், ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், துணைத்​ தலைவர் கமலக்​ கண்​ணன், இணைச்​செய​லா​ளர் சுஜாதா விஜயக்​கு​மார், பொருளாளர் ​சு​பாஷ் சந்​திர போஸ், முன்​னாள் தலை​வர் கேயார், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்​கத் தலை​வர் டி.ஜி.​தி​யாக​ராஜன், செயலாளர் டி.சி​வா, பொருளாளர் தனஞ்​செயன், தயாரிப்பாளர்கள் ஆர்​.பி.சவுத்​ரி, ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

          

அக்​கூட்​டத்​தில், திரைத்​துறை​யின் நலன் கருதி பல முக்​கிய முடிவு​கள் எடுக்​கப் பட்​டன. அதில், திரைப்​படங்​கள் வெளி​யீட்​டுக்​கும், ஓடிடி வெளி​யீட்டை முறைப்​படுத்​து​வதற்​கும் தயாரிப்​பாளர்​கள், விநி​யோகஸ்​தர்​கள், திரையரங்க உரிமை​யாளர்​கள் அடங்​கிய கூட்​டுக்​குழுஅமைப்​பது என்​றும், இந்த கூட்​டுக்​குழு எடுக்​கும் முடிவுக்கு திரைத்​துறை​யினர் கட்​டுப்பட வேண்​டும் என்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

நடிகர், நடிகையர், இயக்​குநர், முன்​னணி தொழில்​நுட்ப கலைஞர்கள் எந்த தயாரிப்​பாளரிடம் முதலில் அட்​வான்ஸ் வாங்குகிறார்களோ அவருக்கு முன்​னுரிமை கொடுத்து திரைப்​படத்தை முடித்துத் தர வேண்​டும். திரைப்​படங்​களில் நடிக்​கும் முன்​னணி நடிகர், நடிகையர், இயக்​குநர், தொழில்நுட்ப கலைஞர்கள், இணை​யதள தொடர்​களில் நடிக்​கவோ, இயக்​கவோ செல்​லக் கூடாது.

அவ்​வாறு செல்​லும் நடிகர், நடிகையர், முன்​னணி தொழில்​நுட்ப கலைஞர்​கள் திரைப் படங்​களில் பணிபுரிய கூட்​டுக்​குழு எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப் பட வேண்​டும் என்பது உள்பட சில தீர்மானங்கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT