பிரியா பவானி சங்கர்

 
தமிழ் சினிமா

‘மரகத நாணயம் 2’-வில் பிரியா பவானி சங்கர்!

செய்திப்பிரிவு

ஆதி, நிக்கி கல்ராணி, முனிஸ்காந்த் நடித்து, 2017-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘மரகத நாணயம்’. ஏஆர்கே. சரவண் இயக்கி இருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.

பேஷன் ஸ்டூடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சவுத்ரி, தேவ் மற்றும் கே.வி.துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT