தமிழ் சினிமா

தள்ளிப் போகிறது பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ ரிலீஸ்

செய்திப்பிரிவு

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம், ‘எல்ஐகே’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சீமான், எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்தாண்டு வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருப்பதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப் படம் டிச.18-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இது ரொமான்டிக் காமெடி படம் என்பதால் அடுத்த வருடம் காதலர் தினத்துக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT