பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘டிசி’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்குகிறார்.
இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரித்து, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டார்க் காமெடி ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், த்ரில்லர் கலந்த திரைப்படமாக இது உருவாகிறது.
இதில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.