பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தோன்றும் ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபுதேவா. அவரது மகன் ரிஷி தேவா இன்டி மியூசிக்கல் வீடியோ மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த வீடியோ பதிவில் அசத்தலாக நடனமாடி, நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
‘முதல் முதலாய்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். இதனை ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார். இதில் ரிஷி தேவா மற்றும் கைரா இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.
இப்பாடல் காதல், அப்பாவித்தனம், மறக்க இயலாத தருணங்கள் உள்ளிட்டவற்றை பாடல் வரிகளாக எழுதியிருக்கிறார்கள்.
இப்பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.