நடிகர் சந்தீப் கிஷன்
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு எதிராக, வேண்டும் என்றே எதிர்மறை விமர்சனங்கள் பரப்பப்படுவதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக எனக்கும் என் படத்துக்கும் எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் எதிர்மறை பதிவுகளைப் பார்த்து வருகிறேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். என்னை விட உங்களுக்குத்தான் இழப்பதற்கு அதிகம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விஷயம் வெளிவந்தால் அனைவரும் சிக்கிக்கொள்வீர்கள்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.