ஐந்து நண்பர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ள ‘பீட்சா பாய்ஸ்’ படத்தில் சிவம் சங்கர் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சரத் லோகிதஸ்வா, ஷோப்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்பில் சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் தயாரிக்கின்றனர். கதை எழுதி, இயக்கி, இசை அமைத்துள்ளார் சேகர் கேசவ் சிரின். குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றது.
“சொந்த ஊரை விட்டு வெளியேறி, தங்களுக்கென வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் 5 நண்பர்கள் பெங்களூரு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள்தான் படம். நட்பை மையமாகக் கொண்டகதை மற்றும் பெங்களூருவின் சமகால நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்” என்றது படக்குழு.