நடிகர் விஜய் விஷ்வா

 
தமிழ் சினிமா

காதல் கொலை தொடர்​பாகப் பேசும் ‘பாரிஸ் கஃபே’

நிலா

குரு சோமசுந்​தரம், அனு​மோள், அர்ச்​சனா குமார், விஜய் விஷ்வா உள்​ளிட்​டோர் நடித்​துள்ள படம், ‘பாரிஸ் கஃபே’. இப்​படத்​தைக் கண்​மணி ரங்​க​நாதன் தயாரித்​துள்​ளார்.

சரஜ் சீலன் இயக்​கி​யுள்ள இதில் நடித்​தது பற்றி நடிகர் விஜய் விஷ்வா கூறிய​தாவது: இந்த படத்​தில் அமெரிக்​கா​வில் இருக்​கும் கவின் என்​கிற ஆய்​வாள​ராக நடித்​திருக்​கிறேன். எனது தோழி​யின் தந்​தை​யாக குரு சோமசுந்​தரம் நடித்​திருக்​கிறார். இங்கு நடக்​கும் ஒரு சம்​பவத்​துக்​காக நான் அமெரிக்​கா​வில் இருந்து வரு​கிறேன். பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை. காதல் கொலை தொடர்பாக ஒரு முக்​கிய​மான கருத்தை இந்​தப் படம் பேசுகிறது.

இது தொடர்​பான படங்​களில் வழக்​க​மாகப் பேசப்​படும் விஷயமாக இல்​லாமல் புதி​தாக சில விஷ​யங்​களைச் சொல்லியிருக்கிறோம். இப்​படத்​துக்​குப் பிறகு மேலும் 2 படங்களில் நடித்து வரு​கிறேன். வெப் தொடர் ஒன்​றி​லும் நடிக்கிறேன். திரைத்​துறைக்கு வந்​தது முதலே சமூக சேவை​களில் ஆர்​வ​மாக ஈடு​பட்​டுக்​கொண்டு வரு​கிறேன். இதற்​காக ‘விவி என்டர்​டெ​யின்​மென்ட்’ என்ற நிறு​வனத்​தின் மூலம் பல்​வேறு உதவி​கள் செய்து வரு​கிறோம்.

பெண்​கள் பாது​காப்​புக்​காக ஷீல்டு என்ற அமைப்பை உரு​வாக்கி இருக்​கிறோம். போதைப் பொருட்​களுக்கு எதி​ராக விழிப்​புணர்​வு, மொபைல் அடிக் ஷனில் இருந்து குழந்​தைகளை மீட்​பது உள்பட பல்​வேறு விஷ​யங்​களுக்​காக விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளை நடத்தி வரு​கிறோம். இதற்கு மக்​களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது” என்​றார்.

SCROLL FOR NEXT