தமிழ் சினிமா

பால் டப்பாவின் ‘ஏரோப்பிளேன்’

செய்திப்பிரிவு

ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசி​ரியர் என பன்​முக திறன் படைத்த பால் டப்பா எழுதி, பாடி, நடித்​துள்ள புதிய இசை ஆல்​பம், ‘ஏரோப்பிளேன்’. இதில் பால் டப்​பாவுடன் அனன்யா ராம் பிரசாத்​தும் நடித்​துள்​ளார். இந்த ஆல்​பதை ராகுல் அசோக் குமார் இயக்​கி​யுள்​ளார். அடியேல் மஸார் இசையமைத்​துள்ள இந்த ஆல்​பத்​துக்கு பிரகதீஷ் பிரபு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​பாடல் யூடியூப்​பில் வெளி​யிடப்பட்​டுள்​ளது.

“காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்​னாயே... எனத் தொடங்​கும் இது காதல் தோல்வி பாடல். பிரேக்​கப்​புக்குப் பிறகு விமானத்​தில் பயணிகளாகச் சந்​திக்​கும் காதல் ஜோடி​யின் நினைவலைகளாக இப்​பாடல் உரு​வாகி​யுள்​ளது. இணை​யத்​தில் இப்​பாடல் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது” என்​றார் பால்டப்பா.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT