தீபாவளி ரிலீஸ் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு வழிவிட்டு பொறுமையாக களம் காணவரும் படங்கள் என நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கும் படங்களின் பட்டியல் இது.
ராமாயணா: பாகம் 1: நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல், அனுபம் கேர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நவம்பர் 5 அன்று தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியாகிறது.
சீன்: சூர்ய நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மர்மமான கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வரும் கிறுக்குத்தனம் நிறைந்த இன்பராஜ் என்கிற காவல் அதிகாரி பற்றி பேசும் இந்த நடைச்சுவை கலந்த படம் நவம்பர் 6 அன்று திரையில் வெளியாக இருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்தப் படத்தில் அம்மனாக நயன்தாரா, வில்லியாக ரெஜினா காஸ்சன்ட்ரா, துனியா விஜய், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த பக்தி ஃபேண்டஸி படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
போகி: சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘போகி’. இந்தப் படத்தில் ஷர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் நவம்பர் 12 அன்று வெளியாக இருக்கிறது.
இட்லு அர்ஜூனன்: மகேஷ் உப்பலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘இட்லு அர்ஜூனன்’. இதில், அனிஷ் ரெட்டி, அனஸ்வர ராஜன், வெண்ணெலா கிஷோர், முகேஷ் ரிஷி, கலையரசன், ஹரிகிருஷ்ணன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த அதிரடி காதல் திரைப்படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓம்:சாப்டர் 1: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செம்மரக் கடத்தல் பின்னணியில் விரியும் இந்தப் படம் நவம்பர் 20 அன்று திரைக்கு வர இருக்கிறது.
ஆகாசம்லோ ஓகா தாரா: பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆகாசம்லோ ஓகா தாரா’. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வசிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.
காஸ்மிக் சாம்சன்: அபிஜித் ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காஸ்மிக் ‘சாம்சன்’. இந்தப் படத்தில் சந்தீப் பிரதீப், மியா ஜார்ஜ், முகேஷ், அல்போன்ஸா புத்ரன், அல்தாஃப் சலிம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 27 அன்று திரைக்கு வருகிறது.
அர்ஜுனன் பேர் பத்து: அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. இந்தப் படத்தில் யோகி பாபு, அனாமிகா மகி, காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 27 அன்று திரைக்கு வருகிறது.
பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்: அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ‘பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்’. இந்தப் படத்தில் நஸ்லென், குஞ்சாகோ போபன், சவுபின் ஷாஹிர், டோவினோ தாமஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் நவம்பர் 19 அன்று திரைக்கு வருகிறது.
மைசா: ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மைசா’. இதில் ராஷ்மிகா மந்தனா, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், நவம்பர் 27 அன்று வெளியாக இருக்கிறது.
சத்தியவான் சாவித்ரி: அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சத்தியவான் சாவித்ரி’. இந்தப் படத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஈஎன்இ ரிப்பீட்: தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஈஎன்இ ரிப்பீட்’. இந்தப் படத்தில் விஸ்வாக் சென், அபிநவ் கவுதம், ஸ்ரீநாத் மாஹந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் நவம்பர் 19 அன்று வெளியாகிறது.