’ஜனநாயகன்’ லீக்கானது தொடர்பாக அதிர்ச்சியடையவில்லை என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக்கானது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. இந்த விவகாரம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஏ.சி அளித்த பேட்டியில், “மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது, நான் அரசியலுக்கு போகிறேன். என்னை வைத்து படம் பண்ணுகிறீர்கள், நிறைய பிரச்சினைகள் வரும். உங்களுக்கு ஒ.கேவா என்று கேட்டேன் என்றார். பிரச்சினைகள் வரும் என்று நினைத்து தான் விஜய் சொன்னார். அதே போல் பிரச்சினைகள் வரும் என்பது எல்லாம் எதிர்பார்த்த ஒன்று தான்.
ஒருவரை முதலில் மன ரீதியாக அடிப்பது, அடுத்து பண ரீதியாக அடிப்பது. இந்தச் சமயத்தில் ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியாகிறது என்றால் அது எதிர்க்கட்சியினரின் சதி என்ற சந்தேகம் வருகிறது. ’ஜனநாயகன்’ லீக்கானது தொடர்பாக அதிர்ச்சியடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.