நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அக்.1-ல் படம் வெளியாக இருக்கிறது.
இதுபற்றி படக்குழு கூறும்போது, “இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும் பேசப்படும். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சூரியும் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களை நிச்சயமாகப் புது உலகத்துக்கு அழைத்துச் செல்வார். குறிப்பாகச் சமீப நாட்களாக சீரியஸான கதாபாத்திரங்களில் கதைநாயகனாக நடித்து வரும் சூரியின் காமெடியை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும்” என்றது படக்குழு.