தமிழ் சினிமா

IMDB | பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த புதுமுகங்கள்!

செய்திப்பிரிவு

இணை​யத் திரைப்பட தரவுத்​தள​மான ஐஎம்​டிபி (IMDB), ஒவ்​வொரு வருட​மும் அந்​தந்த வருடங்​களில் பிரபல​மான நட்​சத்​திரங்​கள், இயக்​குநர்​களின் பட்​டியலை வெளி​யிட்டு வரு​கிறது.

ஐஎம்​டிபி இணை​யதள பக்​கத்​தில் தேடப்​பட்ட திரைப் பிரபலங்களின் பெயர்​கள் அடிப்​படை​யில் இப்​பட்​டியல் வெளி​யிடப்படு​கிறது. 2025-ம் ஆண்​டுக்​கான பட்​டியல் இப்​போது வெளி​யாகி இருக்​கிறது. இதில் முன்​னணி நட்சத்திரங்களான ரஜினி​காந்த், அமீர்​கான், தீபிகா படு​கோன் ஆகியோரை பின்​னுக்​குத் தள்​ளி, 2 புது முகங்கள் முதலிடம் பிடித்​துள்​ளனர்.

இந்​தி​யில் வெளி​யாகி வெற்​றி பெற்ற ‘சயா​ரா’ படத்​தில் நடித்த அஹான் பாண்​டே, அதில் நாயகி​யாக நடித்த அனீத் பட்டா ஆகியோர் முதல் இரண்டு இடங்​களைப் பிடித்​துள்​ளனர். மோஹித் சூரி இயக்​கிய இப்​படம் உலக அளவில் ரூ.580 கோடி வசூலித்துள்ளது.

அஹான், அனித் ஆகியோ​ருக்​குப் பிறகு அடுத்​தடுத்த இடங்​களில் ஆமிர்​கான், இஷான் கட்​டார், லக் ஷயா, ராஷ்மிகா மந்​த​னா, ‘லோகா சாப்டர் 2-சந்​தி​யா’ படத்​தில் நடித்த கல்​யாணி பிரியதர்​ஷன், திரிப்தி திம்​ரி, ‘காந்​தா​ரா’​வில் நடித்த ருக்​மணி வசந்த், ரிஷப் ஷெட்​டி ஆகியோர்​ உள்​ளனர்​.

SCROLL FOR NEXT