தமிழ் சினிமா

நயன் - கவினின் ‘ஹாய்‘ ட்ரெய்லர் எப்படி? - வாழ்க்கைத் துணை தேடல்

ப்ரியா

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹாய்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

பாக்யராஜ் தனது மகன் தன் மகன் மயில்சாமிக்கு ஆண்களின் வகைகளை சொல்வதில் தொடங்குகிறது ட்ரெய்லர். 2.47 நிமிடங்கள் ஓடும் காட்சிகளில் காதல் மற்றும் திருமணத்தில் துரதிருஷ்டம் துரத்தும் மயில்சாமியின் கதைக் காட்டப்படுகிறது. தனக்கான துணையை தேடுகையில் அவன் வாழ்க்கையில் வருகிறாள் தேவையானி. 

அதற்கு பின்பும் மயில்சாமி வாழ்க்கையில் குழப்பங்கள் தொடர, இருவருக்குள்ளும் என்னவானது என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது ட்ரெய்லர். கவின் மயில்சாமியாகவும், நயன்தாரா தேவயானியாகவும் படத்தில் நடித்திருக்கின்றனர்.

நயன்தாரா ஜோடியாக பொருந்த வேண்டும் என்பதால் முகத்தில் தாடி, பெரிய கண்ணாடி என கவினின் தோற்றத்தில் முதிர்ச்சி காட்ட முயற்சித்து இருக்கிறார்கள்.  

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்​சர்​ஸ்​,செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் நயன்​தா​ரா, விக்​னேஷ் சிவன், எஸ்​.எஸ்​.லலித்​கு​மார் இணைந்து தயாரித்​துள்ள ‘ஹாய்’ படத்தில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ், சத்​யன், ‘ஆதித்​யா’ கதிர், குரேஷி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.  

முதலில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 28-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT