நயன்தாரா, கவின் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ஹாய்’. இதில் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு எடவன் இயக்கி இருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ்,செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக.14-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்று சூர்யாவின் ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ‘மகுடம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருப்பதால் இதன் ரிலீஸ் தேதி ஆக.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.