தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சீன்’ படத்தில் நஸ்லென் கதாபாத்திரம் அறிமுகம்

ப்ரியா

சூர்யா நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘சீன்’ படத்தில் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நஸ்லென் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. இந்தப் படத்தில் அவருடன், நஸ்ரியா நஸீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில், நஸ்லென் நடிக்கும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி முதல் தோற்றத்தையும், ஓர் அறிமுக வீடியோவையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிந்துள்ளார்.

அதில், ‘சில அறிமுகங்கள் மிகவும் சிறப்பானவை. அளவற்ற திறமை கொண்ட நஸ்லெனை ‘சீன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். ஈஸ்வரனை அறிமுகப்படுத்துகிறோம். தமிழ் சினிமாவுக்கு மனமார வரவேற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் 45 நொடிகள் ஓடும் அறிமுக வீடியோவில், ஈஸ்வரனாக வரும் நஸ்லென் ஒரு சைக்கோ கொலைகாரராகவும், தான் செய்த கொலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்பவராகவும் காட்டப்படுகிறார். காவல் அதிகாரியான சூர்யா ஈஸ்வரனைப் பற்றிச் சொல்லும்போது, ‘நாம ஒரு முகமில்லாத, உணர்ச்சிகள் இல்லாத, மனித தன்மையற்ற கொடூரனைத் தேடுகிறோம்’ என்று கூறுகிறார்.  

நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் பொழுதுபோக்குப் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் - 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா - சூர்யா இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்துக்கு வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்ய, சூஷின் ஷியாம் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT