ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘மை லார்ட்’. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
அம்பேத்குமார் வழங்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும் விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரகத் திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் கவனத்தை ஈர்த்துள்ளது. எளிய மனிதர்களின் வாழ்வை பேசும் இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது.