தமிழ் சினிமா

7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல்

நிலா

ஆர்யா, கவுதம் ராம் கார்த்​திக், சரத்​கு​மார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்​சன், அதுல்யா என பலர் நடித்​துள்ள படம், ‘மிஸ்டர் எக்ஸ்’. மனு ஆனந்த் இயக்கி இருக்​கும் இப்படம் ஏப்​.17-ல் வெளி​யாக இருக்​கிறது.

பிரின்ஸ் பிக்​சர்ஸ் எஸ்​.லஷ்மன்​கு​மார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்​துள்ள படம் இது. இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் மனு ஆனந்த் கூறும்​போது, “போலீஸ் அதி​காரி​கள், ராணுவ அதி​காரி​கள் யார் என்​பது நம் எல்​லோருக்​கும் தெரி​யும். ஆனால் உளவாளி​களை யாருக்​குமே தெரி​யாது.

          

இந்​தப் படம் உரு​வாவதற்கு காரணம் 2 பேர். அவர்​களைப் பற்றி எங்​கே​யும் சொன்​னது இல்​லை. இப்​போது இங்கே கூட என்​னால் சொல்ல முடி​யாது. அது​தான் உண்​மை. இந்​தி​யா​வில் வெவ்​வேறு கால​கட்​டத்​தில் நடை​பெற்ற ஏழு உண்​மைச் சம்​பவங்​களை மையப்​படுத்தி இந்​தப் படம் உரு​வாகி உள்​ளது.

ஆனால் சமீபத்​திய பல பேட்​டிகளில் இது துரந்​தர் படத்​தைப் போல இருக்​கிறது என்று ஒரு பேச்சு உரு​வாகி உள்​ளது. அதை​யும் இதை​யும் ஒப்​பிட வேண்​டாம். இது துரந்​தர் அல்ல. இரண்டு படங்​களி​லுமே உண்மை சம்​பவங்​களை வைத்து படமாக்கி இருக்​கிறோம் என்​ப​தைத் தவிர வேறு எந்த ஒற்​றுமையும் இல்​லை” என்​றார். படக்​குழு​வினர்​ கலந்து​கொண்​டனர்.

SCROLL FOR NEXT