தமிழ் சினிமா

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?

நிலா

‘பைனலி’ பாரத் கதா​நாயக​னாக நடித்​துள்ள ‘மிஸ்​டர் பாரத்’ படத்தை நிரஞ்​சன் இயக்​கி​யுள்​ளார். இதில், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்​.சுந்​தர் ராஜன், லிங்கா உள்பட பலர் நடித்துள்ளனர். இதை பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்கு​வாட், தி ரூட் நிறு​வனங்​கள் சார்​பாக சுதன்​சுந்​தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனி​சாமி தயாரித்​துள்​ளனர். இப்​படம் ஆக.1-ல் வெளி​யா​வ​தாக இருந்​தது. இந்​நிலை​யில் இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுபற்றி படக்​குழு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “எதிர்​பார்ப்​புக்​குரிய பல திரைப்​படங்​கள் அன்று வெளி​யான​தால் ஒவ்​வொரு திரைப்​படத்​துக்​கும் உரிய இடமும் கவன​மும் கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, எங்​கள் வெளி​யீட்டை ஒத்​தி​வைத்​துள்​ளோம். புதிய வெளி​யீட்டு தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT