தமிழ் சினிமா

‘டெக்​சாஸ் டைகர்’ படப்​பிடிப்பு நிறைவு

நிலா

தமிழில் கவனிக்​கப்​பட்ட ‘ஃபேமிலி படம்’ படத்தை இயக்​கிய செல்வ கு​மார் திரு​மாறன், அடுத்து இயக்​கி​யிருக்​கும் படம், ‘டெக்சாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயக​னாக நடிக்கிறார்.

சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ரோகிணி, சாச்​ச​னா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்​திபன் குமார், அந்​தோணி​தாசன், சம்​யுக்தா ஷான் நடித்​துள்​ளனர். யுகே ஸ்கு​வாட் சார்​பில் சுஜித், பாலாஜிகு​மார், பார​தி​கு​மார், செல்​வ கு​மார் திரு​மாறன் இணைந்து தயாரித்​துள்​ளனர். ஓஷோ வெங்​கட் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதற்​கிடையே இப்​படத்​தின் படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது.

இது பற்றி இயக்​குநர் செல்​வகு​மார் திரு​மாறன் கூறும்​போது, “கண்​டிப்​பாக இப்​படம் ரசிகர்​களுக்கு புதிய அனுபவத்​தைக் கொடுக்​கும். பொழுது ​போக்​கு, உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​கள், விறு​விறுப்​பான கதை​யம்​சத்​துடன் இசைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்​தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இப்​படம் முழு​மை​யான திரையரங்கு அனுபவத்​தைக் கொடுக்​கும். இப்படத்தின் அடுத்​தடுத்த அப்​டேட்​டு​கள் விரை​வில்​ வெளிவரும்​” என்​றார்.

SCROLL FOR NEXT