தமிழ் சினிமா

‘மூன் வாக்’ இசை வெளியீடு ஹைலைட்ஸ்

செய்திப்பிரிவு

பிரபுதேவா நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம், ‘மூன் வாக்’. இதில் யோகி​பாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், லொள்ளு சபா சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மனோஜ் நிர்​மலா தரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்​துள்​ளார். பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இதன் பாடல் வெளி​யீட்டு விழா​வும் ஏ.ஆர்​.ரஹ்​மானின் பிறந்​த​நாள் விழா​வும் சென்னை​யில் உள்ள தனி​யார் கல்​லூரி ஒன்​றில் நடை​பெற்​றது.

விழா​வில் இப்​படத்​தின் அனைத்​துப் பாடல்​களை​யும் ஏ.ஆர்​.ரஹ்​மான் பாடி​னார். பிரபல​மான ‘முக்​காலா’ பாடலுக்கு ஏ.ஆர்​.ரஹ்​மானுடன் நடன​மாடி​னார் பிரபுதேவா.

பின்​னர் ரஹ்​மானின் பிறந்​த​நாளை முன்​னிட்​டு, பிரம்​மாண்ட கேக் வெட்டி கொண்​டாடினர். இந்​நிகழ்ச்​சி​யில் பேசிய யோகி​பாபு, தான் 16 கெட்​டப்​பு​களில் நடித்​துள்​ள​தாகத் தெரி​வித்​தா​ர்​.

SCROLL FOR NEXT