தமிழ் சினிமா

‘மொத ராத்திரி’ டிரெய்லர் வெளியீடு

நிலா

அறி​முக இயக்குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பகவதி பெரு​மாள், ஷெல்லி கிஷோர் என பலர் நடித்​துள்ள படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்​கு சுரேந்​திரன் பரஞ்​சோதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பரத் சங்​கர் இசை அமைத்​திருக்​கிறார். இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில், ராஜா கருப்​ப​சாமி பேசும்​போது, “என் கதை​யின் ஆன்​மாவைப் புரிந்து கொண்டு வாய்ப்​பளித்த மைத்ரி மூவி மேக்​கர்ஸ் நிறு​வனத்​துக்கு நன்​றி. என்​னுடைய அனுபவத்​திலிருந்து உரு​வான கதை தான் இந்த படம். என் வாழ்க்​கை​யின் அனைத்து பெண்​களுக்​கும் இந்​தப் படத்தை சமர்ப்​பிக்​கிறேன்” என்​றார்.

படத்​தின் ஹீரோ ரிஷி​காந்த் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் கதையை ஒரு குறும்​பட​மாக இயக்குநர் கொண்டு வந்​தார். அதன் பிறகு 6 வருடம் பயணம் செய்து இந்​தப் படத்தை உரு​வாக்​கி​யுள்​ளோம். என்னை விட்​டுக் கொடுக்​காத இயக்​குநருக்​கும், கதை மீது நம்​பிக்கை வைத்த தயாரிப்​பாளர்​களுக்​கும் நன்​றி. ஒரு நல்ல படத்​தில் நானும் ஒரு பகு​தி​யாக இருப்​ப​தில் மகிழ்ச்​சி. குடும்​ப​மாக இந்​தப் படத்தை ரசிப்​பீர்​கள். அனை​வருக்​கும் கண்​டிப்​பாக இப்​படம் பிடிக்​கும்” என்​றார்.

SCROLL FOR NEXT