இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. இதில் அஞ்சு கிருஷ்ணா அஷோக், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன் உள்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து பேசிய சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படம் இது. இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து மீண்டார்களா, இல்லையா என்பதே கதை. நவம்பர் மாதம் வெளியாகிறது” என்றார்.