தமிழ் சினிமா

பார​தி​ராஜா, கே.​பாக்​ய​ராஜுக்கு மணிமண்​டபம்: திரை​யுல​கம் சார்பில் ‘ராஜகோபுரங்​கள் நினைவு உற்சவம்’

நிலா

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இயக்​குநர்​களான பார​தி​ராஜா, கே.பாக்​ய​ராஜ் ஆகியோர், சாதனை​களைப் பாராட்டி கவுரவிக்​கும் வகை​யில், ‘ராஜகோபுரங்​கள் நினைவு உற்​சவம்’ என்ற நினைவு அஞ்​சலி நிகழ்ச்​சி, வரும் 16-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, சென்னை கலை​வாணர் அரங்​கில் நடத்​தப்​படு​கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்​கம், தென்​னிந்​திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலா​ளர்​கள் சம்மேளனம் (பெப்​சி), தமிழ்​நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்​கம் ஆகிய அமைப்​பு​கள் இணைந்து இதை நடத்​துகின்​றன. இதுகுறித்த செய்தி​யாளர்​கள் சந்​திப்பில், ஜி.கே.எம்​. தமிழ்​குமரன், நாசர், ஆர்.கே.செல்​வ​மணி, டி.சி​வா, கே.எஸ்​.ரவி​கு​மார், லிங்​குசாமி உள்பட பலர் கலந்துகொண்​டனர்.

அப்​போது பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி கூறிய​தாவது : தமிழ் திரை​யுல​கில் பல்​வேறு சாதனை​கள் படைத்த பார​தி​ராஜா, கே.​பாக்​ய​ராஜ் ஆகியோ​ருக்கு அவர​வர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்​டி, அவர்​களின் மார்​பளவு வெண்கல சிலை அமைக்​கப்​படு​கிறது. வரும் 16-ம் தேதி நடக்​கும் ‘ராஜகோபுரங்​கள் நினைவு உற்​சவம்’ நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​ளும்​படி தமிழக முதல்​வர் விஜய், அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோ​ருக்கு அழைப்பு விடுத்​துள்​ளோம்.

ரஜினி​காந்த், கமல்​ஹாசன், சிரஞ்​சீ​வி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிவ​ராஜ்கு​மார், ரிஷப் ஷெட்​டி, வி.ர​விச்​சந்​திரன், மம்மூட்டி, மோகன்​லால், ஜாக்கி ஷெராப், போனி கபூர் மற்​றும் மத்திய அமைச்சர்​கள் எல்​.​முரு​கன், சுரேஷ் கோபி ஆகியோர் கலந்​துகொண்டு பேசுகின்​றனர்.

பார​திராஜா, கே.​பாக்​யராஜ் ஆகியோரின் திரைப்படங்கள் குறித்த புகைப்பட கண்​காட்சி இடம்​பெறுகிறது. அவர்​களின் படங்​களில் இருந்து 20 பாடல்​களை தேர்வு செய்​து, மேடை​யில் நடன நிகழ்ச்சி நடத்​தப்படு​கிறது.

பார​திராஜா, கே.​பாக்​ய​ராஜ் வாழ்க்​கையை 10 நிமிடத்தில் குறும் பட​மாக ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பொதுமக்​களுக்கு அனுமதி இலவசம். இந்​நிகழ்ச்​சி​யின் கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பை பார்த்​திபன் ஏற்​றுள்​ளார்​. இவ்வாறு செல்வமணி கூறி​னார்​.

SCROLL FOR NEXT