தமிழ் சினிமா

டார்க் ஹியூம​ராக உரு​வாகும் ‘மாஸ்டர் பிளான்’

ப்ரியா

தருண் விஜய், சாயாதேவி நாயகன் நாயகி​யாக நடிக்​கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. உத்ரா புரொடக் ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்கு​கிறார்.

திவ்யா ஜெகத், அப்​பு​குட்​டி, கூல் சுரேஷ், சென்ட்​ராயன், வினோத் சாகர், அருண் மைக்​கேல் டேனியல், சம்​பத் ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார்.

          

“அரசி​யலைச் சேர்ந்​தவர்​களால் ஏற்​படும் பிரச்​சினை​யில் நாயகன் நாயகி​யின் குடும்​பம் சிக்​கிக் கொள்​வதும், அதிலிருந்து எவ்​வாறு மீண்டு வரு​கிறார்​கள் என்​ப​தை​யும் டார்க் ஹியூமர் வகை​யில் இப்​படம் பேசும்” என்​றது படக்​குழு.

ஏப்​ரல் இறு​தி​யில் தொடங்க இருக்​கும் இப்​படத்​தின் பூஜை சென்​னை​யில் நேற்று நடந்​தது. தயாரிப்​பாளர்​கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்​.தேனப்​பன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு படக்​குழு​வினரை வாழ்த்​தினர்.

SCROLL FOR NEXT