தமிழ் சினிமா

நகைச்​சுவை, ஃபேன்டஸியுடன் வரும் ‘மாஸ்டர் பிளான்’

நிலா

தருண் விஜய், அக் ஷரா ரெட்டி நாயகன்​–​நாயகி​யாக நடிக்​கும் படம் ‘மாஸ்​டர் பிளான்’. இதில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்​பு​குட்​டி, தீபா சங்​கர், தேனப்​பன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். கே.எஸ். பழனி ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார். உத்ரா புரொடக் ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிக்​கும் இப்​படத்​தை, செ.ஹரி உத்ரா எழுதி இயக்​கு​கிறார்.

இதன் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. “தகு​திக்கு மீறிய வாழ்க்​கையை வாழ விரும்​பு​கிறது ஒரு நடுத்தர குடும்​பம். அதனால் உரு​வாகும் பிரச்​சினை​களில் இருந்​து, எப்​படி மீண்டு வரு​கிறது என்​பது இதன் கதை. பிளாக் காமெடி, பேன்டஸி கலந்த குடும்ப பொழுது​போக்கு திரைப்​பட​மாக உரு​வாகி வரு​கிறது” என படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT