இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மன்னர் முத்து இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீட்டுக்கு ‘மன்னாரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் பாடலை, மன்னர் முத்து பாடியுள்ளார். கென் ராய்சன் இயக்கியுள்ளார்.
ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ள இப்பாடல், விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்று இக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இப்பாடலை கே.காட்டியன், கானா பிரான்சிஸ் எழுதியுள்ளனர். யூடியூப் தளத்தில் இப்பாடல் வரவேற்பைப் பெற்றுவருகிறது.